Friday, January 18, 2019

டிப்ஸ் for ஹேர்



டிப்ஸ் for ஹேர்

தலை முடி மினுமினுப்பாக இருக்க 

 தேங்காய் பால்,    செம்பருத்தி சாறு , கலந்து

நன்கு  உச்சியிலிருந்து  மெதுவாக  மசாஜ் 

செய்யவும்.  பின்பு  1/2 முதல் 1 மணி

நேரம் வரை ஊற வைத்து குளிக்கவும் .

மேலும் முடிசிக்கு  விழாமல் இருக்க

வடித்த கஞ்சி சேர்த்து கொள்ளலாம். இவ்வாறு 

 செய்து வந்தால் முடி


கருமையாகவும், மினுமினுப்பாகவும் இருக் கும்

முடி உதிர்தல் குறையும் .


குழந்தைகளுக்கான ராகி மாவு


குழந்தைகளுக்கான    ராகி மாவு






முதலில் ராகியை சுத்தம் செய்து கழுவி 5 முதல் 6 மணி நேரம் ஊற

வைக்கவும்.  பின்பு  வழு வழுப்பாக  அரைத்து காட்டன் துணியில்

வடிகட்டி ராகி பாலை தனியே எடுக்கவும்.  பின்பு அகலமான

தட்டில் உளற்றி வெயிலில் நன்கு 10 முதல் 15 நாட்கள் நீர்

வற்றும் வரை காய வைக்கவும்.  பின்பு கட்டி இல்லாமல் மிக்ஸியில்

 பொடி செய்து  ஈரம்  படாமல் வைத்து கொள்ளவும்.  தேவையான போது

ராகி  பவுடருடன் பால் கலந்து கூழ் கிளறி சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு

ஊட்டவும்.  தேவையெனில் கூழுடன் நெய் சேர்த்து கொள்ளலாம்.

1 மாதக் குழந்தை முதல் 10 வயது குழந்தை வரை தினமும் 2 வேளை

தரலாம்.

Friday, January 11, 2019

மஞ்சளின் பயன்கள்

                       பொங்கல் சமயத்தில் மஞ்சள் கிழங்குகள் கிடைக்கும் .
அதை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு வெயிலில் காய வைத்து
அதனுடன் குப்பைமேனித்தழை, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள்
கிழங்கு, பூலாங்கிழங்கு, சிறிய துண்டு வசம்பு சேர்த்து நன்கு அரைத்து
தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் முகத்தில் தேவையற்ற ரோமம்,
முகப்பருக்கள், மங்கு விழுதல், ஆகிய தொந்தரவுகள் வராது.
மேலும் வியர்வை வாடையும் வராது

Thursday, January 10, 2019

நரை முடிக்கு ஒரு தீர்வு


நரை முடிக்கு ஒரு தீர்வு


மலை நெல்லியை நறுக்கி தூய்மையான விளக்கெண்ணெயுடன்
சேர்த்து தணிவான சூட்டில் வதக்கவும். பிரவுன் கலர் ஆக நிறம்
மாறும் வரை நன்கு வதக்கவும்.  பின் நன்கு மசித்து ஒரு தூய்மையான
பாட்டிலில் நிரப்பவும் .  பின் தினமும் இதை முடியில் தடவிவர
நரை முடி கருமையாக மாறுவதை பார்க்கமுடியும்.